/* */

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
X

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் பகுதி கல்லுாரிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு

முப்பெரும் விழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில், வள்ளலார் 200வது ஆண்டு விழா, சன்மார்க்க மன்ற தொடக்க விழா, மரபு கண்காட்சி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா தாளாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் பங்கேற்று பேசி, மரபு கண்காட்சியினை திறந்து வைத்தார். வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம், சன்மார்க்க சங்கத்தை தொடங்கி வைத்தார். மரபு கண்காட்சியில் பழங்கால தமிழ் பொருட்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், மூலிகைகள், பழந்தமிழர்கள் கையாண்டு வந்த பொருட்கள், போரில் பயன்படுத்தப்பட்ட வாள், கேடயம், உள்ளிட்ட பல காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இயக்குனர் ராமசாமி, முதல்வர் காமராஜ், பேராசிரியர்கள் சங்கரராமன், மஞ்சுளா உள்பட பலர் பங்கேற்றனர்.

திருக்குறள் மாமணி விருது

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.தாளாளருக்கு, திருக்குறள் மாமணி விருது வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், குறள் மலைச்சங்கம் சார்பில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தமிழக ஆளுனர் ரவி பங்கேற்று, திருக்குறள் சிறப்புகளையும், தமிழ் மொழி சிறப்புகளையும் கூறி, ஒவ்வொருவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நூல் திருக்குறள் என்று கூறினார். இதில் பங்கேற்ற குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணனுக்கு, திருக்குறள் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் பொருட்டு சிறப்பாக பணியாற்றி வருவதற்காக, ஆளுநர் ரவி ரவி, "திருக்குறள் மாமணி "விருது வழங்கி சிறப்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை குறள்மலைச்சங்க நிறுவனர் ரவிக்குமார் செய்திருந்தார்.

எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி 20வது பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா தாளாளர் மதிவாணன், துணை தலைவர் இந்திரஜித் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் பாலமோகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், பட்டமளிப்பு உரை நிகழ்த்தி ஆயிரத்து 100 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார். இதில் 3 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். வள்ளலார் தமிழ் மன்ற தலைவர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி வாழ்த்தி பேசினார்.

சாதனை படைத்த அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

குமாரபாளையத்தில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், கோவை கஸ்தூரி சீனிவாசன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 44 பொறியியியல் மாற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 106 அணிகள் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜவுளி தொழில்நுட்பத்தில் 43 ஆண்டுகள் அனுபவம் பெற்ற குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 5 அணிகள் பங்கேற்றன. இதில் விகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இரு மாணவர்களை கொண்ட அணி இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் பரிசாக வென்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் இளங்கோ, முதல்வர் டாக்டர் பாலமுருகன் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினர்.

பன்னாட்டு தமிழ் ஆய்வு கருத்தரங்கம்

குமாரபாளையத்தில் பன்னாட்டு தமிழ் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற்றது.பாரதியின் 100வது ஆண்டு நினைவு, வ.உ.சி.யின் 150வது நினைவு, வள்ளலாரின் 200வது ஆண்டு நினைவு சார்பாக, குமாரபாளையத்தில் 'தமிழ் சுடர்களை போற்றுவோம்' எனும் தலைப்பில், பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம் மற்றும் ஆய்வுக் கோவைகள் வெளியீடு நிகழ்ச்சி கல்லூரி, தனியார் கல்லூரி தாளாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரராமன், மஞ்சுளா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வள்ளலார் பேரன் உமாபதி, பாரதியாரின் கொள்ளு பேத்தி உமா பாரதி பங்கேற்று வள்ளலார் பற்றியும், பாரதியை பற்றியும் பேசினார்கள். சென்னை முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், வடலூர், தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்க செயல் தலைவர் ராம்தாஸ், மாநில பொது செயலர் டாக்டர் வெற்றிவேல், வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, ஈரோடு அருள்சித்தா கேர் அருள்நாகலிங்கம், திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது ஜானகிராமன், ஈரோடு சாந்தம் உலக தமிழ் வளர்ச்சி ஆய்வு மையம், தலைவர் கரி வரதராஜன், சென்னை, குறள்மலைச் சங்கம், நிறுவனர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் பேசினார்கள்.

இவ்விழாவையொட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் சஞ்சய்குமார் முதல் பரிசும், நிர்மல் குமார் இரண்டாம் பரிசும், தமிழ்செல்வி மூன்றாம் பரிசும், ராஜலட்சுமி ஆறுதல் பரிசும் பெற்றனர். கட்டுரை போட்டியில் சுவாதி முதல் பரிசும், அபிராமி இரண்டாம் பரிசும், ஆனந்தி மூன்றாம் பரிசும், சிந்து ஆறுதல் பரிசும் பெற்றனர்.

தமிழ்த்துறையில் சிறந்து பணியாற்றிவர்கள், சமூக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் விடியல் பிரகாஷ், இயல்பா மேரி, நளினா, முஹம்மது பஹீம், ஹீத் அகமத், ரித்திகா, தேவிகா சேட்டு மாதர்ஷா உள்ளிட்ட 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கட்டுரை போட்டியில் மொத்தம் சமர்பிக்கப்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கை 450. 3 நூல் தொகுப்புகளும் சேர்ந்து 1800 பக்கங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Oct 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?