/* */

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
X

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வதற்காக பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் பரப்புரைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த நிலையில், ஏப்ரல் 17 மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களை தயார் செய்யும் பணியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உணவகங்கள், தொழிற்கூடங்கள், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணை, தொழிற்கூடங்கள், கட்டுமான பணிகள் என பல்வேறு தேவைகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென ஏற்கனவே தேர்தல் ஆணையம் தொழில் நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை முதலே குவியத் துவங்கினர்.

இதுகுறித்து உணவகம் ஒன்றில் மாஸ்டராக பணியாற்றும் முருகேசன் என்பவர் கூறும் பொழுது எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டமாகும். வேலைக்காக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தற்போது பாராளுமன்றத் தேர்தலையொட்டி வாக்களிக்க செல்ல வேண்டும் என்பதற்காக, நான் மற்றும் என்னுடன் பணி புரியும் எனது ஊரைச் சேர்ந்த தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு எனது ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளேன். தேர்தல் நாளான வெள்ளிக்கிழமைக்கு அடுத்த நாள் சனி, ஞாயிறாக இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கும் சேர்த்து விடுமுறை எடுத்துள்ளேன்.. சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தாரை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு சொந்த ஊருக்கு செல்வது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Updated On: 18 April 2024 8:57 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...