/* */

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில் வீணாகும் குடிநீர்: மக்கள் அலட்சியம்

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில் குடிநீரை பொதுமக்கள் வீணடித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினத்தில்   வீணாகும் குடிநீர்: மக்கள் அலட்சியம்
X

குமாரபாளையம் விட்டலபுரி, முதல் தெருவில்  வீணாகும் குடிநீர்.

உலக தண்ணீர் தினத்திலும் குமாரபாளையம் விட்டலபுரி, முதல் தெருவில் குழாய் இல்லாத பைப்பிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறிக்கொண்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் குமாரபாளையம் நகராட்சி சார்பில் தினமும் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சிக்கனமாக பயன்படுத்த முடியாமல் மக்கள் வீணாக்கி வருகின்றனர்.

மேலும் நகரில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் குழாய் பொருத்த வேண்டும். இதேபோல் தண்ணீரை வீணாக்குபவர்கள் மீது, அபராதம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 March 2022 4:00 PM GMT

Related News