/* */

நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

நில முகவர்கள் சங்கம் சார்பில்  நீர் மோர் பந்தல் திறப்பு
X

பைல் படம்

குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆண்டுதோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து, கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால், அதை பொதுமக்கள் சமாளிக்க உதவி செய்யும் வகையில், நில முகவர்கள் சங்கம் சார்பில், தலைவர் சின்னசாமி தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்கள் மற்றும் இதர நபர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து நீர் மோர் பருகி வெப்பத்தின் தாக்கத்தை தணித்து கொண்டனர். வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் கொடுத்த நில முகவர் சங்கத்தினரை பொதுமக்கள் பாராட்டினர்.

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா தலைவர் சின்னசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் மையத்தில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் உள் நோயாளிகளுக்கு பால், பன் வழங்கப்பட்டது. மேலும், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை, சிகிச்சையில் இருந்து வரும் ஏழை கூலி தொழிலாளிக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கணேசன், சரவணன், பெருமாள், ஆறுமுகம், சண்முகம், ஸ்ரீதர், வடிவேல், லட்சுமணன், மணிவண்ணன், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.



Updated On: 7 April 2023 8:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!