/* */

குமாரபாளையத்தில் அறிவிப்பே இல்லாமல் நூலக கட்டிடம் இடமாற்றம்

குமாரபாளையம் வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள நூலகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அறிவிப்பே இல்லாமல் நூலக கட்டிடம் இடமாற்றம்
X

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு பகுதியில் பூட்டி வைக்கப்பட்டுள்ள நூலகம்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு பகுதியில் அரசு சார்பில் சிறிய நூலகம் செயல்பட்டு வந்தது. இது தற்போது அருகில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் அருகே செயல்பட்டு வருகிறது.

பழைய நூலக கட்டிடம் முன்பு நூலக இடமாற்றம் சம்பந்தமாக எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. ஆகவே பலரும் பழைய நூலக கட்டிடத்தை பார்த்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

தற்போது செயல்பட்டுவரும் நூலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் வந்து பயன்பெற்று வந்தனர்.

புதிய நூலகமும் அடிக்கடி பூட்டியே கிடப்பதால் அரசு சார்பில் நூலகம் அமைத்தும் அதன் பலன் பொதுமக்களை சேராமல் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து பரிசீலித்து, நூலகம் தினமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...