/* */

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி

கொக்கராயன்பேட்டை காவிரி கரையோரம் குப்பைகளுக்கு ஒரு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் உண்டாகி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கொக்கராயன் பேட்டை ஊராட்சி. இங்கு, ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றங்கரையோரம் பீடி கழிவு குப்பைகள், இதர குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டபடும் குப்பைகளுக்கு, சில நபர்கள் தீ வைத்துச் செல்கின்றனர். குப்பையில் இருந்து கடும் புகை வெளியாகிறது.

இதனால், காவிரிக்கரையோரப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை பரவுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதானவர்கள், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.

எனவே கொக்கராயன்பேட்டை ஊராட்சி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகள் அனைத்தையும் குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 19 Jun 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’