/* */

கார்த்திகை தீப அகல் விளக்கு உற்பத்தி தீவிரம்

குமாரபாளையம் அருகே கார்த்திகை தீப அகல்விளக்கு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கார்த்திகை தீப அகல் விளக்கு உற்பத்தி தீவிரம்
X

குமாரபாளையம் பகுதியில் அகல்விளக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தேவூர் பகுதியை சேர்ந்த, கோனேரிப்பட்டி, மயிலம்பட்டி, செட்டிபட்டி காவேரிபட்டி பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாரல் மழை பெய்து வருவதால் அகல் விளக்குகள் வெயிலில் உலர்த்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளர்கள் காலங்காலமாக மண்பாண்ட பொருட்களான மண் அடுப்பு மண் பானை, மண் உரிசட்டி, குதிரை, பசு, முனியப்பன், கண்ணிமார் ,உள்ளிட்ட சாமி சிலைகள் அகல் விளக்குகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலை தங்களது குல தொழிலாக செய்து வருகின்றனர். .இங்கு தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து கோனேரிபட்டி பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் மன்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது : தேவூர் பகுதியில் கோனேரிப்பட்டி , மயிலம்பட்டி, காவேரிபட்டி, செட்டிபட்டி, குஞ்சாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே தங்களது குலத்தொழிலாக மண்பாண்டத் தொழிலை கைவிடாமல் இன்றுவரை செய்து வருகிறோம்.

தீபத் திருவிழாவிற்கு தேவையான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், அகல் விளக்கு தயாரிப்பதற்கு செட்டிமாங்குறிச்சி நாச்சிபாளையம் பகுதியில் மண் எடுத்து வந்து அதில் காவிரி தண்ணீர் தேவையான அளவு ஊற்றி தண்ணீரில் மண் மணல் நன்றாகக் கலந்து, பிசைந்து எடுத்து, அதனை அகல் விளக்கு தயாரிக்கும் இயந்திரம் மூலம் வடிவமைத்து, பிரித்து எடுத்து உலர வைத்து தீமூட்டி நன்கு வேக வைத்து எடுத்து, இதனை 7 முதல் 10அகல் விளக்குகள் 10 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறோம்

அகல் விளக்குகள் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அகல் விளக்குகள் விற்பனையில் போதிய வருமானம் இன்றி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் மண்ணில் தயாரித்த பொருட்கள் வெயிலில் உலர்த்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம், மேலும் நலிவுற்று வரும் பழமை வாய்ந்த மண்பாண்ட தொழிலை பாதுகாக்க அரசு மானிய விலையில் இடுபொருட்கள் மண், மணல், இயந்திரம், ஊக்கத்தொகை வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

Updated On: 25 Nov 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...