/* */

குமாரபாளையத்தில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர் பிரசாரம்

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் தீப்பெட்டி சின்னத்தில் 12வது வார்டில் அதிக கூட்டத்தை சேர்த்து அசத்தி வருகிறார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர் பிரசாரம்
X

குமாரபாளையத்தில் அரசியல் கட்சியினருக்கு இணையாக 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டிடும் அழகேசன் அதிக கூட்டத்துடன் சென்று தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் தீப்பெட்டி சின்னத்தில் 12வது வார்டில் அதிக கூட்டத்தை சேர்த்து அசத்தி வருகிறார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவுடன் தீப்பெட்டி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அழகேசன்.

12வார்டின் முழுமைக்குமான சாக்கடை வரைபடம் தயார் செய்து ஆய்வு குழு ஏற்படுத்தி வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும், மாதம் ஒரு முறை சொந்த செலவில் கொசு மருந்து அடிக்கப்படும், பொதுக்கழிப்பிடம் சீரான முறையில் குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்யப்படும், சுகாதார பணியாளர்களை கொண்டு தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதை உறுதி செய்வோம், ஒற்றை பெற்றோர் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பங்களில் இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர உதவி செய்யப்படும், தகுதியான நபர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேள தாளங்கள் முழங்க அரசியல் கட்சியினருக்கு இணையாக அதிக கூட்டத்துடன் பிரச்சாரம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து வருகிறார்.

Updated On: 17 Feb 2022 1:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’