/* */

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு  வரவேற்பு
X

படவிளக்கம் : தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் பங்கேற்க குமாரபாளையம் புறவழிச்சாலை வழியாக வந்த போது எடுத்த படம்

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி கோவையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் பங்கேற்க குமாரபாளையம் புறவழிச்சாலை வழியாக வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் முதல்வருக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் சால்வை வழங்கினர். கட்சி நிர்வாகிகள் பலரிடம் சால்வை பெற்றுக்கொண்டு, அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.

இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு போக்குவரத்து போலீசாரும் இல்லை. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு முன்னாள் முதல்வரை காண அச்சத்துடன் சாலையை கடந்து வந்து கொண்டிருந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என காலை 08:00 மணி முதலும், மாலையில் இவர்கள் வீடு திரும்பும் நேரமான மாலை 04:00 மணி முதலும் புறவழிச்சாலை பகுதியில் ஒரு போக்குவரத்து போலீஸ் நிற்பது இல்லை. போக்குவரத்து போலீசார் பகல் 12:00 மணிக்கு மேல் வருவது, இரவு 09:00 மணிக்கு மேல் வருவது என்பது யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் கிடையாது. மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, ஒரு போக்குவரத்து போலீசாவது எப்போதும் போக்குவரத்து சரி செய்ய நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Oct 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை