/* */

குமாரபாளையம் அருகே ரூ.46 கோடியில் மேம்பாலம்: எம்.பி., சின்ராஜ் தகவல்

குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் மற்றும் புறவழிச்சாலையில் எம்.பி., சின்ராஜ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே ரூ.46 கோடியில் மேம்பாலம்:  எம்.பி., சின்ராஜ் தகவல்
X

குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளை எம்.பி.சின்ராஜ் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் மற்றும் புறவழிச்சாலையில் எம்.பி. சின்ராஜ் ஆய்வு செய்தார்.

இது குறித்து எம்.பி. சின்ராஜ் அளித்த பேட்டியில், குமாரபாளையம் தொகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் சாய ஆலைகளை ஆய்வு செய்தேன். இதில் விதி மீறிய சாய ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு, சாய ஆலைகள் மூடுவதற்கான உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் பொங்கல் விழா முடிந்து ஆய்வு செய்ய உள்ளேன்.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுகொண்டு உள்ளனர். இரண்டு மாதம் முன்பு ஆய்வு செய்து 45 சாய ஆலைகள் மூட உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அதிகாரிகள் சரியாக செய்து உள்ளனரா? என ஆய்வு செய்ய வந்ததில், பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை திருத்தும் செய்ய வேண்டும் என சாய ஆலை அதிபர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்திரவிட்டுள்ளேன்.

சேலம் கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே பிரிவு சாலையில் அதிக விபத்துக்கள் நடந்து வருவதால், மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரியை நேரில் சந்தித்து, இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தேன். தற்போது அமைச்சர் உத்திரவின்படி, இந்த இடம் மதிப்பீடு செய்யப்பட்டு, 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஒரு மாத காலத்தில் டெண்டர் விடப்பட்டு, மார்ச் மாத முடிவில் பணிகள் துவங்கும். அதிலிருந்து 7 மாத கால அளவில் பாலம் பணிகள் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், சாய பட்டறைகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறுகையில், குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சாயப்பட்டறைகள் உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்தி கரிப்பு செய்யாமல் நேரிடை யாக காவிரி ஆற்றில் கலக்க விடுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பொக்லின் மூலம் சாயப்பட்டறைகளை இடித்து வந்தனர். பெரிய அளவிலான சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும் சில சாயப்பட்டரையினர் கழிவுநீரை நேரடியாக வெளியேற்றி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

லுங்கி, கர்சீப், வேட்டி உள்ளிட்ட ஏற்றுமதி ரக ஜவுளிகளை உற்பத்தி செய்வதில் எப்போதும் குமாரபாளையத்திற்கு தனி சிறப்பு உண்டு. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநில மக்களால் விரும்பி வாங்கப்படும். இந்த ரகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்போது நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, ரக ஒதுக்கீடு சட்டம், உள்ளிட்ட பல சூழ்நிலைகள் ஜவுளி தொழிலை பின்னடைவுக்கு தள்ளியுள்ளது. கனரக சாய ஆலைகளை கட்டுப்படுத்தாமல் கழிவுகளை வெளியேற்றி காவேரி ஆற்றை மாசுபடுத்திவிட்டனர். விசைத்தறி தொழிலை செய்வது, தறி ஓட்டுவது ஆகியவை மரியாதை குறைந்த செயலாக பாரக்கப்படும் நிலை வந்துவிட்டது.

தமிழக நூற்பாலைகளில் வேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் பஞ்சாலை தொழில் நுட்பங்களை அறிந்து, அவர்கள் மாநிலத்தில் நிறுவப்படும் ஆலைகளில் வேலை செய்ய துவங்கியுள்ளனர். தமிழகம் மீண்டும் நெசவுத்தொழிலை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெசவுத்தொழிலை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக பயிற்றுவிக்கப்படவேண்டும். இளங்கலை, முதுகலை, வீவிங், வார்பிங் டையிங் டெக்னாலஜி உள்ளிட்ட பட்டம், பட்டய படிப்புகளை உருவாக்க வேண்டும்.

ஜவுளி தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்களை உரிய சம்பளத்துடன் பணியில் அமர்த்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கும் ஆலை தொழிலாளர்களை போல் சீருடை, அடையாள அட்டை, தொழிலாளர் நலச் சட்டம், அரசு மானியம், வங்கி கடன் வழங்கி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். ஜவுளித்தொழிலின் மூலதன செலவை குறைக்கும் வகையில் சாயமிடும் ஆலைகளின் கழிவுநீரை அரசே சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 Jan 2023 1:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்