/* */

குமாரபாளையம் அங்கன்வாடி மையங்களுக்கு திமுகவினர் நன்கொடை

குமாரபாளையத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு பீரோ, மிக்சி, உள்ளிட்ட பொருட்களை தி.மு.க.வினர் வழங்கினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அங்கன்வாடி மையங்களுக்கு திமுகவினர் நன்கொடை
X

குமாரபாளையம்  4-வது வார்டில் உள்ள  அங்கன்வாடி மையங்களுக்கு திமுக நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பீரோ வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு திமுகவினர் பீரோ, மிக்சி, உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். அவ்வகையில், குமாரபாளையம் 4-வது வார்டு அங்கன்வாடி மையங்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பீரோ, மிக்சி, டேபிள், சேர், பேன் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் பங்கேற்று, பொருட்களை வழங்கினார். குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர்கள் கதிரவன் சேகர், புஷ்பா, நகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ஐயப்பன், நிர்வாகிகள் முருகேசன், மோகன், முருகன், மணிகண்டன்,ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 7 April 2022 12:15 AM GMT

Related News