/* */

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர்

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட  கலெக்டர்
X

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

மேட்டூர் அணையில் இருந்து ஒரு வினாடிக்கு திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீரால் குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக நகராட்சி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேட்டூர் அணையில் இரண்டு லட்சத்திற்கும் மேலான கன அடி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் குமாரபாளையத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் முகாம்கள் அமைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள பட்டா நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வீடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு இதே போல் வெள்ளம் ஏற்படுவதற்குள் மாற்று இடம் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. மணிமேகலை தெருவில் காவிரி கரையோர பகுதியில் காவிரி நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய உள்ளது என்றார்.

அவருடன் எஸ்.,பி. சாய் சரண் தேஜஸ்வி, ஆர்.டி.ஒ. இளவரசி, தாசில்தார் தமிழரசி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.மலர்விழி, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், கனகலட்சுமி, ஜேம்ஸ், வேல்முருகன், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

Updated On: 4 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  3. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  5. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  6. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  10. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...