/* */

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பாரதி பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பாரதியார் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளிகளில்  பாரதி பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழாவை தளிர்விடும் பாரதம் அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தளிர்விடும் பாரதம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியை கவுசல்யாமணி பரிசுகள் வழங்கினார்.

குமாரபாளையம் அருகில் உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் 141 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். பள்ளிபாளையம் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாப் போட்டிகளில் பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடமும், பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாமிடமும் ஆகிய மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் இளவரசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாணவ- மாணவிகள் பாரதியார் பாடல்களைப் பாடினர்.

ஆசிரியர் குமார் கூறியதாவது: சுதந்திரம், பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இயங்கி மக்களுக்கு தன் கவியின் மூலம் சுதந்திர தாகத்தையும், அடிமைத்தன ஒழிப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மகாகவி பாரதி எனும் தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞனின் புகழ் தமிழும் தமிழரும் உள்ளவரை போற்றப்படும்

1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதி. தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர், 1904-ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.

பல்வேறு மொழிகளில் புலமை வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

திருவல்லிக்கேணியில் வசித்து வந்த பாரதியார் தினமும் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர் ஆவார். அங்குள்ள கோவில் யானைக்குப் பழம் அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு நாள் அந்த யானை மதம் பிடித்து இவரைப் பிடித்து வீசி உள்ளது. அதில் இருந்தே பாரதியார் உடல் நலம் குன்றத் தொடங்கியது. இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இறப்பு என்பது உடலுக்குத்தான் பாரதி எனும் கவிஞன் பெற்ற கவிதைக்கு இல்லை என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.


Updated On: 12 Dec 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!