/* */

மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
X

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் 2020, ஜூலை 18ல் துவக்கப்பட்டது. அப்போது முதல், வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை.

பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்கள் முன்பு குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது.

இதில் சார்பு நீதிமன்றம் அமைய முன்னெடுப்பு பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை என்பதாலும், அடிப்படை வசதிகள் பலமுறை கேட்டும் செய்து தராததாலும், நீதிமன்ற தொடர் புறக்கணிப்பு செய்வது எனவும், ஏப். 18, காலை 10:00 மணியளவில் நீதிமன்ற வளாகம் முன்பு, மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்தல் சமயம் என்பதால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. கோரிக்கைகள் வலியுறித்தியும், மாவட்ட நீதிபதிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தலைவர் சரவணராஜன் கூறியதாவது:

பலமுறை மாவட்ட நீதிபதியிடம் கேட்டும் பலனில்லை. நீதிமன்றத்திற்கு தேவையான பணிகளை மட்டும் செய்து கொள்கிறர்கள். எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதுடன், உயர்நீதிமன்றம் உத்திரவிட்டாலும், உங்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியாது, உங்களால் ஆனதை பார்த்து கொள்ளுங்கள் என்று மாவட்ட நீதிபதி குணசேகரன் கூறினார். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நீடிக்கும். மேலும் எங்கள் போராட்டம் காத்திருப்பு போராட்டம், தர்ணா போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என தீவிரமடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சங்க செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்தி, ரமேஷ், துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!