/* */

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நீர் மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில், பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மற்றும்  குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில்,  நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் நீர் மாசுபடுவது தடுத்தல் விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட மாசுக்கட்டுபாட்டு துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன், தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, காந்திபுரம், ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தார் காடு, உள்ளிட்ட பல பகுதியின் வழியாக சென்ற பேரணி பள்ளியில் நிறைவுபெற்றது.

இப்பேரணியில், நீர்மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் மாணவர்கள் பங்கேற்றனர். மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி அலுவலர்கள் கார்த்தி, லீலா வினோதன், பிரசாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 26 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...