/* */

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் வழியனுப்பு நிகழ்வு

குமாரபாளையத்திலிருந்து சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

சபரிமலை சேவைக்கு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் வழியனுப்பு நிகழ்வு
X

குமாரபாளையம் ஜெட் பிராண்டு மண்டபத்தில் இருந்து சபரிமலை சேவைக்கு பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 15 பேர் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தை மாத பிறப்பு வரை, கேரள மாநிலம் சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

மகர விளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.

குமாரபாளையம் ஜெட் பிராண்டு மண்டபத்தில் இருந்து சபரிமலை சேவைக்கு பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 15 பேர் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் விழா மாவட்ட செயலர் ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலர் ஜெகதீஸ் கூறுகையில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்திட வேண்டி, கல்லூரி மாணவர்கள் பல கட்டங்களாக ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அனுப்பி வைப்பது வழக்கம்.

தற்போது 6 வது கட்டமாக மாணவர்கள் செல்கிறார்கள். இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், அவசர சிகிச்சை வழங்குதல், பிராணவாயு அறையில் ஆக்சிஜன் கொடுத்தல், உயிர் நீத்தாரை அவரது உடலை சொந்த ஊரில் கொண்டு போய் சேர்த்தல், புண்ணிய பூங்காவனம் எனப்படும் ஐயப்பன் கோவில் வளாகம் முழுதும் தூய்மை படுத்தும் பணி செய்தல், என்பது உள்ளிட்ட பணிகள் செய்வார்கள். இவர்கள் 11 நாட்கள் செய்து திரும்புவார்கள். அதன் பின் அடுத்த குழுவினர் செல்வார்கள் என தெரிவித்தார்.

இதில் மாவட்ட துணை செயலர் மோகன்ராஜ், மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்காந்த், கந்தசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் விமல்ராஜ், அருணாராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 8 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...