/* */

மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் மார்ச் 6ல் மது விலக்கு பிரிவு சார்பில் வாகனங்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

மார்ச் 6ல் மது விலக்கு  பிரிவு சார்பில்  வாகனங்கள் ஏலம்
X

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 15 நான்கு சக்கர வாகனம் மற்றும் 66 இரண்டு சக்கர வாகனங்கள், மொத்தம் 81 வாகனங்கள் மார்ச் 6ல் காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், ஆனைக்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

மார்ச் 5ல் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரில் வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனத்திற்கு 2,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், மார்ச் 6ல் காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குள் பொது ஏலம் நடத்தும் இடத்தில், முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம், அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 9080550050, 9942402732, 9976057118.

--

Updated On: 2 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...