/* */

நாகையில் சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டை

நாகையில் சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு அதிரடி காட்டுகிறது. இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ, ஆடியோக்கள்.வெளிவந்தன.

HIGHLIGHTS

நாகையில்  சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டை
X

கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வங்கிகள், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு நாகையில் ஊரடங்கு காலத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் நுண் கடன் நிறுவனங்கள். நாகை தியாகராஜபுரம் பகுதிக்கு இன்று காலை வந்த கிராம விடியல் நிறுவன ஊழியர் அப்பகுதி மக்களை பணம் கட்ட சொல்லி நிர்பந்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.

கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் அப்பகுதி மக்களை ஒன்று கூட்டி குழு கூட்டம் நடத்தும் அந்த நிறுவன ஊழியரின் செயலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

இதேபோல நாகை அடுத்துள்ள வெங்கிடாங்கால் பகுதியை சேர்ந்த தமிழ் என்பவரிடம் L & D சுய உதவிக்குழு நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜர் தெருவில் எக்விடாஸ் நுண் கடன் நிறுவன ஊழியர்கள் இன்று காலை வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழ்வாதாரம் இழந்து வீட்டில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!