/* */

நாகை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலெக்டர், முன்னாள் அமைச்சர், வேட்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர் வேதாரண்யம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி பள்ளியில் கலெக்டர் பிரவீன் நாயர், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.

நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிடும் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் நாகை அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர்.வட்டத்தில் ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை தொடங்குவதில் சில நிமிட தாமதம் ஏற்பட்டதைத் தவிர மிகப் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லாமல் அமைதியாகவே வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

Updated On: 6 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!