/* */

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி
X

மின்சாரம் பாய்ந்து பலியான ராஜலட்சுமி, பழனிவேலு.

நாகை அடுத்துள்ள அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேலு. இவரும், இவரது மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்கள். வழக்கம்போல் சமைப்பதற்காக, பாத்திரத்துடன் கொல்லைப்புறத்திற்கு ராஜலட்சுமி சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவரின் வீட்டு வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி, அறுந்து ராஜலட்சுமியின் மேல் விழுந்துள்ளது. மின்சாரம் தாக்கப்பட்டு, அவர் அலறினார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த பழனிவேலு, மனைவியை காப்பாற்ற முயன்று மின் கம்பியை கையால் தட்டியுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தில் கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நாகை போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில், மின்சார கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தை, பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 19 Oct 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!