/* */

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

சோழவந்தான் அருகில் விக்கிரமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்து இரண்டுவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சோழவந்தான் அருகில் விக்கிரமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது ,மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதிஷ், விக்கிரமங்கலத்தை சேர்ந்த தமிழ்பாண்டி, ராமு, கொடி,வீராசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர்கள், விக்கிரமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்து அவர்களிட மிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். சமீப காலங்களில், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதற்கு மாணவர்களிடையே புழங்கும் போதை பழக்கமும் ஒரு காரணமாகும்.இதனை, மதுரை மாவட்ட காவல் துறையும் தமிழக அரசும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 29 April 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!