/* */

மதுரையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதி

பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவர முடியவில்லை

HIGHLIGHTS

மதுரையில்  குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் பேருந்து  சிக்கியதால் பயணிகள் அவதி
X

மதுரையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து

மதுரையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பயணிகள் அவதிப்பட நேரிட்டது

மதுரை மாடக்குளத்திலிருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு முதல் நடையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்ராஹார பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து திடீரென சாலையில் ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டபட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கியது.

இதனைத்தொடர்ந்து, பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு ஓட்டுநர் பலமுறை முயற்சித்தும் பள்ளத்திலிருந்து வெளிவர முடியவில்லை. இதனால், பேருந்தில் இருந்த சுமார் 30 பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். மாற்றுப் பேருந்து கிடைக்காமல் அனைவரும் நெடுந்தொலைவு நடந்தே சென்றனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் ஆங்காங்கு நடைபெற்று அதற்காக தொண்டபடும் பள்ளத்தை சரிவர மூடாமல், மாநகராட்சி ஊழியர்கள் சென்று விடுவதால், இது போன்று அடிக்கடி வாகனங்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் சிக்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...