/* */

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய விழா: பக்தர்கள் வழிபாடு

கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய விழா: பக்தர்கள் வழிபாடு
X

சோழவந்தான் அருகே மேல கால் காளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி வந்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதளுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை கோவிலிலிருந்து வைகை ஆற்றிற்கு சென்று பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்கினி சக்தி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் .

இன்று இரவுகரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். நாளை காலை கோவில் மண்டபத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் நாளை இரவு அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.இரவு, கிராமத்தின் சார்பாக வள்ளி திருமணம் எனும் நாடகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று காலை முளைப் பாரி ஊர்வலம் நடைபெற்று பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, மேலக்கால் கிராம கமிட்டியாளர்கள் முதன்மைகாரர்கள் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.

Updated On: 27 Sep 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!