/* */

திருடுபோன தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்

மதுரை செல்போன் கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளை அடித்த 45 சவரன் நகை மீட்பு .குற்றவாளிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.

HIGHLIGHTS

திருடுபோன  தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்
X

மதுரையில் திருடுபோன 45 பவுன்  தங்க நகைகளை 48 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மதுரையில் திருடுபோன 45 பவுன் தங்க நகைகளை 48 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் விமலநாதன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீரோவை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது . இச்சம்பவம் குறித்து திலகர் திடல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான பெண்மணி மற்றும் சுந்தரேசன் என்பவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து திருடுபோன நகைகளை மீட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொள்ளை சம்பவம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலை உள்ளது.

போலீஸார் பொதுமக்களுக்கு அனைத்து வீதிகளிலும் கேமராக்கள் பொருத்தி பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் போலீஸ் அவசர எண் அழைத்து புகார் கொடுக்கவும், தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் முகம் தெரியாத வியாபாரிகளிடம் பொருள்கள் வாங்குவதை தவிர்க்கவும் ,ஆண் துணை இல்லாமல் செல்லும் பெண்கள் அதிக நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்கவும், போலீஸ் இலவச செயலி எஸ் ஓ எஸ் அப்ளிகேஷனை பதிவுசெய்து குற்ற சம்பவங்கள் நடக்கும் விதத்தில் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On: 15 March 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...