/* */

மதுரை க்ரைம் செய்திகள்

விளாங்குடியில் கடை முன்பாக வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை க்ரைம் செய்திகள்
X

மதுரை பகுதியில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

ரூ 15 ஆயிரம் வழிப்பறி; 4 வாலிபர்கள் கைது

செல்லூர், ஜீவா மெயின் ரோடு கட்டபொம்மன் நகர் சரவணன் 42. இவர் திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடியில் ஜவுளிக்கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அவரை நான்கு வாலிபர்கள் சுற்றி வளைத்து அவரிடம் இருந்து ரூபாய் 15 ஆயிரத்தை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சரவணன் செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு செல்வம் மகன் சபாபதி 20 ,கீழ வைத்தியநாதபுரம் தத்தனேரி வ உ சி தெரு புது ராஜா மகன் கார்த்திக் 21, விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு முருகன் மகன் யுவராஜ் 20, விளாங்குடி செம்பருத்தி நகர் 2வது சாமிநாதன் மகன் கார்த்திக் பாண்டி 26 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வெவ்வேறு இடங்களில், நான்கு பேர் தற்கொலை

* அண்ணா நகர் யாகப்பா நகர் முத்துமணி மனைவி வெண்ணிலா 23 .இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந் நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

* உத்தங்குடி சின்னமங்கலக்குடியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் 42. இவர் ஷேர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்தார். இதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஞான பண்டிதன் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி விஜயலட்சுமி கே. புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அவனியாபுரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி 23 .இவர்கள், கூட்டுக் குடும்பமாக வசித்து வநத நிலையில், சில நாட்களாக மிகவும் மன அழுத்தத்தில், முத்துலட்சுமி இருந்து வந்துள்ளார்.இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முத்துலட்சுமியின் தந்தை தங்கராஜ் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.நகர் முனியாண்டி கோவில் சந்துவை சேர்ந்தவர் பழனி மகன் வாசு 17. இவர் பிளஸ் டூ படித்து வந்தார். அவருக்கு படிக்க விருப்பமில்லை. ஆனால் பெற்றோர் அவரை படிக்கும்படி வற்புறுத்தினர்.இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து மாணவனின் தந்தை பழனி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுதங்களுடன் இரண்டு வாலிபர்கள் கைது

.அவனியாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்,.இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வெள்ளக் கல் சந்திப்பில் சென்ற போது, சந்தேகப்படும் படியாக பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து, அவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர்கள் பழனி அடிவாரம் பூபால கிருஷ்ணன் என்ற பூபாலன் ,போடிலயன் அந்தோணி மகன் பாண்டியராஜன் என்ற ராஜ் 22 என்று தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தார். அவர்கள் இரண்டு வாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கொலை செய்யும் திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு வாள், டூவீலர் ஒன்று ,செல்போன்கள் 4 முதலியவற்றை பறிமுதல் செய்தார்.

ஜவுளிக்கடையில் காப்பர் வயர்கள் திருட்டு

விளாங்குடி திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு துப்புரவு பணியாளராக மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செல்வராஜ் 51 என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல பணிக்கு சென்றபோது கடையில் வைத்திருந்த 34 கிலோ காப்பர் வயர்கள் திருடு போயிருந்தது.இதுகுறித்து செலவராஜ் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அங்கு வேலை செய்த மூன்று ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையின் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்த ஊழியர்களிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் உடையில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

மதுரை வளர்நகர் மந்தைசாமி மகன் நாகராஜ் 20.இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்குடி பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.அங்கு போலீஸ் உடை அணிந்திருந்த வாலிபர், நாகராஜை அழைத்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கியுள்ளார்.அவர்வேறு ஒருவரிடம் பேசிவிட்டு தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இதுகுறித்து நாகராஜ் கே. புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் செல்போன் பறித்த நபர் போலீசா அல்லது போலியான போலீசா என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

Updated On: 24 Jan 2023 12:01 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!