/* */

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வரும் 31-ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வரும்  31-ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, எதிர்வரும் 31.05.2022 (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், வார்டு எண்.72 முத்துராமலிங்கபுரம், வார்டு எண்.73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, வார்டு எண்.74 பழங்காநத்தம், வார்டு எண்.78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, வார்டு எண்.79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வார்டு எண்.80 வீரகாளியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.81 ஜெய்ஹிந்துபுரம், வார்டு எண்.82 சோலையழகுபுரம், வார்டு எண்.83 எம்.கே.புரம், வார்டு எண்.84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.91 மீனாட்சி நகர் அவனியாபுரம், வார்டு எண்.92 பாம்பன் சுவாமி நகர், வார்டு எண்.93 பசுமலை, வார்டு எண்.94 திருநகர், வார்டு எண்.95 சௌபாக்யாநகர், வார்டு எண்.96 ஹார்விப்பட்டி, வார்டு எண்.97 திருப்பரங்குன்றம், வார்டு எண்.98 சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், வார்டு எண்.99 பாலாஜி நகர், வார்டு எண்.100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய வார்டுகள்)

இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Updated On: 29 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!