/* */

முன்னாள் முதலமைச்சர் மீது வலைதளங்களில் பொய்யான தகவல்-காவல் துறையினரிடம் புகார்

வலைதளங்களில் வந்தது இது தான்- எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும்.

HIGHLIGHTS

முன்னாள் முதலமைச்சர் மீது வலைதளங்களில் பொய்யான தகவல்-காவல் துறையினரிடம் புகார்
X

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வலைதளங்களில் பொய்யான தகவல் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 12 மாவட்டங்களில் காவல் துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.என மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது தமிழகத்தில் இரண்டாம் அலையில் தொற்று அதிகமாகி நோய் தொற்று காரணமாக அதிகமாக பலியாகின்றனர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது தற்போது அரசின் இந்த அவல நிலையை திசைதிருப்பும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மீது அவதூறு பிரச்சாரத்தை வலைத்தளங்களில் செய்து வருகின்றனர்

கடந்த 22ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என ஒரு தகவல் வலைதளங்களில் வந்தது அதில் முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில் நாங்கள் தாயில்லா பிள்ளைகள் எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்று வெளிவந்துள்ளது.வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது

இவ்வாறு அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கழக ரீதியில் உள்ள சேலம்,நாமக்கல் ,கரூர், மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, சிவகங்கை, திருநெல்வேலி ,தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்

மதுரையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திலும் ,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கௌரிசங்கர் மேலூர் காவல் நிலையத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர் என்று கூறினார்

Updated On: 23 May 2021 10:30 AM GMT

Related News