/* */

மழையால் சேதமடைந்த நெற்கதிர்கள் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

சூளகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மழையால் சேதமடைந்த நெற்கதிர்கள் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
X

மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்ன தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் விவசாயி. இவர் இந்த வருடம் நன்றாக மழை பெய்த காரணத்தினால் 9 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளார்.

தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்ததால் நெல் வயலில் கதிர்கள் முழுவதும் சாய்ந்து மடிந்தது. இதனால் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலையில் நெல் மணிகள் அனைத்தும் வயலிலேயே முளைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி நரசிம்மன் கூறுகையில், சுமார் ரூ.3 லட்சம் வரை செலவு செய்து தற்போது பத்துப் பன்னிரண்டு லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே அரசு அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 14 Nov 2021 4:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!