/* */

50 சதவீத மானிய விலையில் துவரை விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை

50 சதவீத மானிய விலையில் துவரை விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

50 சதவீத மானிய விலையில் துவரை விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை
X

இது குறித்து ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளது. ஓசூர் வட்டாரத்தில் துவரை மானாவாரி விதைப்பு சுமார் 1500 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேரடி விதைப்பின் மூலம் குறைந்த மகசூல் கிடைத்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு "நாற்று விட்டு நடவு" செய்யும் புதிய முறை மாநிலத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் ஆரம்பித்து மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் BRG1, BRG5, CO8 ஆகிய ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்காக ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் துவரைப் பயிர் நன்கு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் வளர உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட உரக்கலவை 50 சதவீதம் மானிய விலையில் தற்போது ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஓசூர் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!