/* */

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

HIGHLIGHTS

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய் சரண் தேஜஸ்வி கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றார். அதன் பிறகு மாவட்டத்தில் லாட்டரி விற்பனை, குட்கா விற்பனை போன்றவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். மேலும் குற்ற வழக்குகளிள் தொடர்புடையவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தார். இந்தநிலையில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியல்களை எடுத்து விசாரிக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, போச்சம்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொலை செய்து மும்பையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அதே போல கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பர்கூர் அருகே சிறுவனை கொலை செய்து வீசிய குற்றவாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களும் ஓரிரு நாட்களில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து, கண்டுபிடிக்கப்படாமல் போன கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கிடப்பில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை வழக்குகளும் தற்போது தூசி தட்டி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 30 Aug 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?