/* */

கொரோனா வார்டில் நோயாளியுடன் தங்க வற்புறுத்தும் ஊழியர்கள்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா வார்டில், நோயாளியுடன் உதவியாளர்களை தங்க வற்புறுத்துவதாக புகார்

HIGHLIGHTS

கொரோனா வார்டில் நோயாளியுடன் தங்க வற்புறுத்தும் ஊழியர்கள்.
X

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சம்பங்கிராமன். இவரது 75 தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, கடந்த 19ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் சம்பங்கிராமனையும் தங்குமாறு மருத்தவமனையில் கூறியுள்ளனர். அத்துடன் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உதவியாளர்கள் என பலர் நடமாடியும் வந்துள்ளனர்.

அவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதே என சம்பங்கிராமன் அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டதற்கு, கொரோனா வார்டில் மூன்று பேர் மட்டுமே உள்ளதாகவும், வேண்டுமென்றால் போராட்டம் நடத்துங்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து சம்பங்கிராமன் கூறுகையில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் வெளியாட்களை அனுதிக்கக் கூடாது என்ற விதியை மீறி, அனைவரையும் உள்ளே விடுகின்றனர். பணியில் ஆட்கள் குறைவாக உள்ளதால், அனைவரையும் கவனிப்பதில்லை. இதனால் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் இருந்து எனது தந்தையை சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளேன். எனவே, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Updated On: 24 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’