/* */

சிறுமி கடத்தல் வழக்கு: 2 பேருக்கு 10 ஆண்டு சிறை விதிப்பு

சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு, 15 ஆண்டு தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம், அவர் மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவர்முக்குளத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், அந்த சிறுமியை கடத்தி சென்றதும், ஓசூர் தொரப்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவர் அதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Updated On: 11 May 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்