/* */

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
X

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

கிருஷ்ணகிரி மாவட்டம், பூசாரிப்பட்டி பஞ்சாத்துக்குட்பட்ட கரடிகுறியில் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விதித்த பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி, வரட்டனபள்ளி, ஓரப்பம், சூளகிரி, பூசாரிபட்டி, ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.

காளைகளை அழைத்து செல்வோர் கொரானா தடுப்பூசி சான்றிதழ்கள் வைத்துள்ளனரா, எந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த எருது விடும் விழாவில் இரு புறமும் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு மத்தியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் குறிப்பிட்ட எல்லையை குறைந்த வினாடியில் வேகமாக கடந்து சென்ற காளைகளுக்கு பரிசு தொகைகள் வழங்கப்பட்டது.

எருது விடும் விழாவை காண சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 2,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 4:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!