/* */

அரசு நடுநிலைப்பள்ளி கட்டட மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரசு நடுநிலைப்பள்ளி கட்டட மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
X

வகுப்பறையில் சிமெண்ட் பூச்சு விழுந்துள்ள காட்சி 

பேகேபள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிட மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு. பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26ம் தேதி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 17 Oct 2023 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது