/* */

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள் அடைப்பு

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து டாஸ்மாக் கடைகள் மூடிய ஊழியர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

டாஸ்மாக் பணியாளர் கொலை: கரூரில் மதுபான கடைகள்  அடைப்பு
X

டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கரூர் மதுபான கடைகள் மூடப்பட்டன.

காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கடை விற்பனையாளர் துளசிதாஸ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து கரூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. விற்பனையாளர் துளசிதாஸ் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் கடைகள் மூடப்பட்டன. விற்பனை தொகையினை அபகரிக்கும் நோக்கத்துடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

உயிரிழந்த துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்திற்கு வாரிசு பணி வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாகியும் விற்பனை தொகையினை நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்ய முடியாத டாஸ்மாக் நிர்வாகத்தை வண்மையாக கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கடைகளை மூடிய பணியாளர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வேண்டு கோளுக்கிணங்க டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On: 5 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?