/* */

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன் ? - அண்ணாமலை

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்ள இருந்த ஊர்தி நிறுத்தம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன் ? - அண்ணாமலை
X
செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை.

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, கட்சியின் அலுவலகத்தினையும், ஊடகப்பிரிவு மையத்தினையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் பேசியதாவது:

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் ஊர்திகளில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு என்று திராவிட முன்னேற்ற கழகம் விஷம பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தியாவின் குடியரசு தின விழாவில் மத்திய உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் எந்த மாநிலத்திலிருந்து வாகனங்கள் பங்கேற்க வேண்டுமென்று நிர்ணயிக்கும், இந்த வருடம் தேவையான டாப்ளோ என்கின்ற ஊர்திகள் பங்கேற்க விரும்புகின்றீர்களா? என்று அந்தந்த மாநிலத்தில் உள்ள தலைமை செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக தமிழதத்தில் இருந்து பங்கேற்று, மொத்தமாக 10 ஸ்டேஜ் பிராசஸ் ஆகி பின்பு தான் ஊர்திகள் பங்கு பெறும், இந்தியன் ஆக்ட் 75 என்கின்ற வகையில் டேப்ளோ பங்கேற்கும். இந்த வகையில் 2005 ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் நிலையில், வேறு எந்த மாநிலத்திலிருந்தும் பங்கேற்க வில்லை. இந்த ஊர்திகளில் இருந்து 15 மாநிலங்களில் இருந்து மட்டுமே பங்கேற்கும். ஆனால் பிரதமர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, தமிழகத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இந்த டாப்ளோ ஊர்தி பங்கேற்றது.

நமது தமிழகத்திலிருந்து சென்ற டாப்ளோ 2019 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை மையமாக கொண்டு பங்கேற்றது. 2020 ம் ஆண்டு நமது கிராமத்தில் உள்ள ஐயனார் சுவாமியை கொண்டு பங்கேற்றது. 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் சிற்பக்கலைகளை கொண்டு பங்கேற்றது. திமுக அரசு மத்திய அரசு குறித்து முற்றிலும் தவறான விஷயத்தினை பரப்பி வரும் நிலையில், வீரமங்கை வேலுநாச்சி அவர்களின் பிறந்த நாளை பிரதமர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு, கொடுக்கப்பட்ட 21 வகை பொங்கல் பொருட்கள் மட்டும் போதும், பாஜக கட்சியும், கூட்டணி கட்சியும் நிச்சயம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் அதிகளவில் இடம் பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...