/* */

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
X

பாலியல் துன்புறுத்தல் வழக்கில்  25 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட கணபதி.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கணபதி ( 61 ). இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 14 , 15 , 17 வயதுடைய சகோதரிகளான 3 சிறுமிகள் கரூரில் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம்,பொங்கல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அப்போது அச்சிறுமிகளுக்குத் தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 2019 - ம் ஆண்டு புகார் அளித்தார்.

இதையடுத்து குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ( போக்சோ ) சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு, குற்றவாளி கணபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 12 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...