/* */

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கரூரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

உபி.,யில் விவசாயிகள் கொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
X

உ.பி யில் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்பினர்.

உத்திரபிரதேசத்தில் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நடத்திய பேரணியில் மத்திய இணை அமைச்சர் மகன் சென்ற கார் மோதியது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 4 பாஜகவினர் உயிரிழந்தனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளில் 4 பேர் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை கண்டித்தும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுய ஆட்சி இந்தியா, சாமானிய மக்கள் நல கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்கள் குறித்து கடந்த 9 மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், உச்ச நீதிமன்றமே விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Updated On: 4 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?