/* */

கரூரில் 7 ம் கட்ட முகாம்: 23,128 பேருக்கு தடுப்பூசி

இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் 7 வது மெகா முகாமில் 23,128 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கரூரில் 7 ம் கட்ட  முகாம்: 23,128 பேருக்கு தடுப்பூசி
X

பள்ளபட்டியில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை பார்வையிடும் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 6 கட்டங்களாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 8,53,600 பேர் உள்ளனர். 6 கட்டங்களாக இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாமில், 8,99,334 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

7 ம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 618 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகம் முன்வராத சூழல் உள்ளதால், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பள்ளப்பட்டி பகுதியில் ஹபீப் நகரில் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் அழைத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கி, அவர்களுக்கு தடுப்பூசி மேலுள்ள அச்சத்தை போக்கினார்.

இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்த பலரையும் ஆட்சியர் அழைத்துச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைத்தார். இதன் மூலம் மாவட டம் முழுவதும் இன்று 3,703 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 19,425 பேருக்கு 2 ம் தவணை தடுப்பூசியும் என 23,128 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 30 Oct 2021 4:45 PM GMT

Related News