/* */

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சின்னம்  பொருத்தும்பணி நடைபெற்றது.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024. வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 20.03.2024 முதல் 27.03.2024 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. கரூர் எம்.பி. தொகுதியைப் பொறுத்தவரை 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit) கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Unit). வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அரவக்குறிச்சி தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும். மணப்பாறை தொகுதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

கரூர் எம்.பி. தொகுதியில் கரூர் – 269, கிருஷ்ணராயபுரம் 260, அரவக்குறிச்சி 253, மணப்பாறை 324, விராலிமலை 255, வேடசந்தூர் 309 வாக்குச்சாவடிகள் என மொத்தம் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1.670 வாக்குச்சாவடிகளில் 8,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2000 கட்டுப்பாட்டுக் கருவிகளும், (Control Unit) மற்றும் 2167 வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் (VVPAT) பயன்படுத்தப்படவுள்ளன.

கரூர் எம்.பி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சி.சி.டிவி கேமிரா பொருத்திய பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவின்போது தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும்.

தொடர்ந்து கரூர் சட்டமன்ற தொகுதிக்கு தாந்தோண்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 10 April 2024 3:05 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...