/* */

கரூர் மாவட்டத்தில் 1214 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி

கரூர் மாவட்டத்தில் 1214 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் 1214 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி
X

மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பள்ளிகளில் 1214 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் முன் படிப்பை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க வைப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பள்ளிக்கு செல்லாமல் உள்ளவர்கள், இடை நின்றவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களை கண்டறிந்தாலோ அல்லது பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைத் தொழிவாளர்களாக வேலைக்கு செல்பவர்களை கண்டறிந்தாலோ சொல்லுங்கள். அரசாங்கம் பாட புத்தகம், புத்தகப்பை கல்வி உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 56 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6144 மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வாங்கல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44 மாணவர்களுக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவியர்களுக்கும் என மொத்தம் 102 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. கரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 14 பள்ளிகளில் பயிலும் 1214 மாணவ மாணவியருக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளதால் அதன் தொடக்கமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன், வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, துணைத் தலைவர் ஜெயந்தி, தலைமையாசிரியர்கள் பாலகிருஷ்ணன், தசண்முகவடிவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Dec 2023 1:57 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  2. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  4. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  7. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  10. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...