/* */

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு

கரூர் 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு திரட்டியதால் மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு
X

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்ற கட்சியினர்.

கரூர் மாநகராட்சி தேர்தல் 48 வார்டில், ஒருவர் அன்னபோஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 47 வார்டுகளில், இன்று காலை முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் 12 வது வார்டு, புனித மரியன்னை அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே, திமுக அமைச்சரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் களம் இறங்கி உள்ளார்.

தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் அந்த வேட்பாளருக்கு திமுகவினர் வாக்குச் சாவடிக்குள் பிரச்சாரம் செய்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக சார்பில் அதன் தலைவர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அதிமுக மற்றும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் புகார் அளித்த நிலையில், கரூர் காங்கிரஸ் எம்பி செல்வி ஜோதிமணி, அப்பகுதிக்கு வந்து கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரபு சங்கரிடம் செல்போன் வாயிலாக புகார் அளித்தார். இருப்பினும், சுயேச்சை வேட்பாளரும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் பூத் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி விட்டு வெளியாகாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

Updated On: 19 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!