/* */

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விவகாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர்.

HIGHLIGHTS

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விவகாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
X

பத்திரிக்கையாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி.

கரூர் கலைஞர் அறிவாலயத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கரூர் மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை. மேலும், 3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது.

அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. தலைமையிடம் இதுகுறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. ஆகவே, எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும். கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Updated On: 31 Jan 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  2. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  3. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  4. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  6. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  9. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!