/* */

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 7 நாட்கள் விடுமுறை
X

கரூர் மாவட்டத்தில் தேர்தல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ௭ நாட்கள் டாஸ்மாக் மது பான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


எம்.பி. தேர்தல்கள், மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினத்தினை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் ஐஎம்எப்எல் 2 எப்எல்3 உரிமங்கள் உள்ள ஹோட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் ஆகியவை கீழ்கண்ட நாட்களில் உலர் நாட்களாக (dry day) அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

17.04.2024 (புதன்கிழமை) காலை 10.00 பணி முதல் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை. எம்.பி. தேர்தலுக்காக.

04.06.2024 (செவ்வாய்க்கிழமை). வாக்கு எண்ணிக்கை நாள்.

21.04.2024 மகாவீர் ஜெயந்தி.

01.05.2024 (புதன்கிழமை) மே தினம்

எனவே மேற்கண்ட நாட்களில் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் எப்எல்2 எப்எல்3 உரிமங்கள் உள்ள மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் விற்பனை முடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் மேற்கண்ட தினங்களில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் பேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் எப்எல்2, எப்எல்3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 April 2024 12:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?