/* */

குமரி மாவட்டம்: ஒரே நாளில் 70 கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகள் 1655 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்வதால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

HIGHLIGHTS

குமரி மாவட்டம்: ஒரே நாளில் 70 கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகள் 1655  பேர் மீது வழக்கு பதிவு
X


கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்வதால் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வாகனங்கள், வாகன ஓட்டிகள் மீது வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.மேலும், மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்வதால் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்விபத்துகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்தது.

இதே போன்று அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் கனிமவளம் கடத்தலில் ஈடுபடும் வாகனமாக இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.இதனைத்தொடர்ந்து அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில், ஒரே நாளில் அதிக பாரம் மற்றும் அதிவேகத்துடன் வந்த 70 கனரக வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1655 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

குமரியில் கடந்த 30 நாட்களில் 2200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மீதும், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Updated On: 27 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?