/* */

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை

மீன் வலை மற்றும் டொயினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று, குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை
X

கோப்பு படம் 

மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களின் ஜிஎஸ்டி வரி கூடிய நிலையில், அதனை குறைக்க தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைர் சேவியர் மனோகரன் கூறும் போது, மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பின் போது மீனவர்கள் பயன்படுத்தும் டொயினுக்கு18 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 15 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதித்தது. இது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வரிவிதிப்பாக உள்ளது என மீனவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், முந்தைய தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக டொயினுக்கு 12 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 5 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் வலைக்கான ஜிஎஸ்டி வரி 5 இல் இருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தற்போதைய தமிழக அரசு மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...