/* */

போக்குவரத்து விதி மீறல் :குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

போக்குவரத்து விதி மீறல் :குமரியில் ஒரே நாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் நடத்திய  வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது, அதிவேகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரேநாளில் 1436 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களில் விதி மீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 17 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...