/* */

அரசு ஆயுர்வேத கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம்

அரசு ஆயுர்வேத கல்லூரியில் கொரோனாவிற்கு புறநோயாளிகள் பிரிவு மற்றும் சிகிச்சை மையம் துவக்கம்.

HIGHLIGHTS

அரசு ஆயுர்வேத கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம்
X

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இரண்டு முறை நோய் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆயுர்வேத மருந்து கடந்த 3 நாட்களாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவு நான்காம் எண் அறையில் சிறப்பு நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்படும் சிகிட்சைகளுடன் கபசுரக் குடிநீர் பொடி, இந்து காந்தம் கஷாயம், அகத்திய ரசாயனம் போன்ற மருந்துகள் இலவசமாக வழங்கப் படுவதாக தெரிவித்தார்.

மேலும் கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவின் நான்காம் எண் அறையில் வழங்கப்படும் இந்த மூலிகை தொகுப்பினை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார் இதனிடையே கொரோனாவிற்கு பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம் பெற விரும்புபவர்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சென்டர் தொடங்கப்பட்டு உள்ளது.

Updated On: 24 April 2021 9:30 AM GMT

Related News