/* */

குமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

குமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. .

HIGHLIGHTS

குமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா
X

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், மாவட்டத்தில் தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே சமீப நாட்களாக குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 2039 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், 2015 பேருக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது. 24 பேருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. மேலும் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு மாநகராட்சி பணியாளர்கள் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 8 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!