/* */

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி
X
கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் சாலை ஓடும் நீர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர், தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, இரணியல், மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் பரவலான மழை பெய்தது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது பெய்து வரும் பரவலான மழையால் குடிநீர் தேவை நிறைவேறுவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 16 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?